ஷைலபுத்ரி
ஹிமயனுக்கு மகளாய் பிறந்த தாக்ஷாயணி நீ
மலையின் உறுதியும் தூய்மையும், பண்பும் நீ
என்னை காக்க ஒரு கையில் திருசூலம் வைத்த நீ
ஒரு கையில் அன்பின் தாமரையும் வைத்தாய் நீ
பிரம்மச்சாரிணி
உன்னிடம் ருத்திராக்ஷமும், கமண்டலுவும் கண்டேன்
அறிவு பெற நான் வேறு எங்கு தான் செல்வேன்
பிரம்மத்தை அறிந்தவள் நீ வெண்ணிறஆடையில்
அடைக்கலம் தேடினேன் அம்மா, உன் கால்களில்
சந்திரகண்டா
மணியோசை என் நன்மைகளை உணர தானா
கோபத்தை அடக்க தான் புலிமேல் அமர்ந்தாயா
பிறை சூடி, சிவப்பணிந்தது எனக்காக தானா
சிவனை அடைந்து, என்னை காக்க வந்த தாயா
கூஷ்மாண்டா
எட்டு கைகளில் ஆயுதங்களுடன், சிம்மத்தில் அமர்ந்து
ஆதவனைப் போல் அன்புடன் எனக்கு வெப்பமும் தந்து
உலகத்தை உருவாக்கும் அண்டம் உன்னிடம் உள்ளது
அறிந்து, அறிவும், தைரியமும் தேடி உலகமே வந்தது
ஸ்கந்தமாதா
அபய வரத முத்திரைகளுடன் உன் மடியில் நான்
அழகனை கண்டேன், மகிழ்ச்சிக்கொண்டேன் நான்
நான்கில் இரண்டிலும் தாமரை காணும்பொழுதில் நான்
உணர்வது ஓர் தாயான உன் தூயமான அன்பு தான்
கத்யாயணி
மூன்று கண்களும், நான்கு கரங்களும், வாளும்
கையில் தாமரையும் வைத்தவள், நீ ஆளும்
உலகில் அரக்கனில்லை, பயமும் இல்லை
மஹிஷனை கொன்ற அம்மா நீயின்றி நான் இல்லை
காளராத்ரி
இறப்பின் பயம் நீக்குவாய், வஜ்ரமும் வாழும் கொண்டு
கழுதையில் அமர்ந்தது என் சோம்பலை அடக்கி கொண்டு
உக்கிர கோபத்திலும் உன் கைகளில் அபய வரதம் கண்டு
உன் அன்பை அறிந்தேன் அம்மா, உன்னை கண்டு கொண்டு
மஹாகௌரி
வெண்பட்டில் விளங்கும் அம்மா, தூய்மையம் நீ
காலையில் காளயில் அமர்ந்த காட்சி தந்தாய் நீ
கைகளில் திரிசூலமும் உடுக்கையம் ஏந்திய நீ
என்னை அரவணைத்து காப்பாத்த வருவதும் நீ
சித்திதாத்ரி
சங்க்கும், சக்கரமும், கதாயுதமும், தாமரையும் கண்டேன்
உன் புன்னகையில் மனமாறும் அமைதியும் கண்டேன்
அஷ்டமாசித்தியும் தருவது நீ தான் என்றறிந்தேன்
முக்தியும் உன் செயல் என்று பக்தியில் நான் உணர்ந்தேன்
-– Adv Dr. க்ரிஸ் வேணுகோபால்
